1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. dhanush om movie public review

ஆரவாரத்துடன் வெளியானது தனுஷின் ஓம்.. ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் அமரன் பட புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள  'ஓம் திரைப்படம் இன்று  உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஒரு வலுவான வெற்றியை எதிர்நோக்கியிருந்த தனுஷுக்கு, இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ள இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
 
முன்னதாக தீபாவளியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சில காரணங்களால் தள்ளிப்போய் இன்று திரைக்கு வந்துள்ளது. குறிப்பாக, தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ள சூழலில் இப்படம் வெளியாகியிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பேனர்கள் வைத்தும் படத்தின் வெளியீட்டைத் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.
 
படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில்  ஓம் திரைப்படத்திற்கு நேர்மறையான வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்களின் விமர்சனங்களில்  சிலவற்றை இங்கே காண்போம்.

 
 
லக்மி காந்த் தனது எக்ஸ் பக்கத்தில் ஓன் படம் குறித்து கூறுகையில்
 
 
கதாபாத்திரங்களுக்கு இடையேயான மோதல்கள் மற்றும் இரண்டு அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. நடிகர் தனுஷ் தனது தீவிரமான நடிப்பால் மிரட்டியுள்ளார். மம்மூட்டி மற்றும் சாய் பல்லவியின் கதாபாத்திரங்களும், அவர்களது நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளன.  வீழ வீரா பாடல் காட்சியும், தனுஷின் எதிர்பாராத புதிய தோற்றமும் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்!  என்ற்ரு தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
 
 
அமுதா பாரதி எனபவர் தனது பக்கத்தில்

 ஓம் – சிறந்த கமர்ஷியல் என்டர்டெயினர்!  
 
 முதல் பாதி, இரண்டாம் பாதி இரண்டுமே சம அளவில் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. கமர்ஷியல் படத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் சரியாக இடம்பெற்றுள்ளன.
இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் உணர்ச்சிகரமான தருணங்களை இயக்குநர் சிறப்பாகக் கையாண்டுள்ளார். தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மம்மூட்டிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சாய் அபயங்கரின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் மேலும் மெருகேற்றியுள்ளது. பாடல்கள் இடம்பெறும் இடங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. சில காட்சிகள் நீளமாக இருப்பதும், கதையின் முக்கியமான திருப்பங்கள் டிரெய்லரிலேயே வெளிப்படுத்தப்பட்டிருப்பதும் படத்தின் குறைகளாக உள்ளன.
 
காட்டில் நடைபெறும் அதிரடி சண்டைக் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான படமாக்கமும், ஒவ்வொரு காட்சியிலும் தெரியும் தரமான ஒளிப்பதிவும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. மொத்தத்தில், ஓம்  ரசிகர்களை ரசிக்க வைக்கும் விறுவிறுப்பான கமர்ஷியல் என்டர்டெயினர்!  
என்று பதிவிட்டுள்ளார்.
 
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
ஜோடி பொருத்தம் வேறலெவல்!.. கல்யாண போட்டோவை பகிர்ந்த அனிருத்..