திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (22:10 IST)

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்!

உலக முதலீட்டாளர்கள்  மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில்  உள்ள டேராடூனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு  நடைபெறவுள்ளது.

டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 9 ஆகிய தேதிகளில் அமைதியில் இருந்து செழிப்பிற்கு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து முதலீட்டாளர்கள் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களும், தொழில்துறை பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.

இந்த  மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்து இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.