செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (09:15 IST)

துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு.. திமுக ஆதரிக்குமா?

மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் அவரது வேட்பாளர் தேர்வை ஏற்றுக்கொண்ட நிலையில், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
 
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டி இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதன் மூலம், சி.பி. ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்ந்தெடுக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
 
சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு தமிழர் என்பதால், ஒரு தமிழர் துணை குடியரசு தலைவராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. ஆதரவு தெரிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், தி.மு.க. தனது கொள்கை நிலைப்பாட்டின் காரணமாக பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Siva