வியாழன், 2 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 18 செப்டம்பர் 2025 (17:42 IST)

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
 
கலை, அறிவியல் மற்றும் வணிகத் துறையில் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் இந்த உதவித்தொகையை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், இந்த அறிவிப்பு பல்வேறு சமூக ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்குவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களை அறிவிப்பதே சிறந்த நடவடிக்கை என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
தேர்தலுக்காக இதுபோன்ற வாக்குறுதிகளை வழங்கி சமூகத்தை கெடுக்க வேண்டாம் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினால் அவர்கள் ஆயிரக்கணக்கில் அரசுக்கு வரி வழங்குவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் ருத்து தெரிவித்துள்ளனர்.

Edited by Siva