வியாழன், 27 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 மே 2025 (14:03 IST)

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ் மற்றும் கே. வினோத் சந்திரனுடன் இணைந்து நீதிபதிகள் நியமன் குறித்த புதிய தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்: அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:
 
*  நீதிமன்றத்தில் பணியாற்ற விரும்பும் நபர், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
*  இந்த புதிய விதி, தற்போது நடைபெற்று வரும் தேர்வுகளுக்கு பொருந்தாது.
 
*   ஆனால் இந்த விதி அடுத்த கட்ட நீதிபதி நியமனத்திலிருந்து இது அமலுக்கு வரும்.
 
*  சிவில் நீதிபதியாக தேர்வு எழுதும் எந்த விண்ணப்பதாரருக்கும் இந்த 3 ஆண்டு அனுபவம் கட்டாயமாகும்.
 
*  அனைத்து மாநில அரசுகளும், தங்களது விதிமுறைகளை இத்தேவைக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.
 
*  அனுபவச் சான்றாக, 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞரால் ஒப்புதல் பெற வேண்டும்.
 
*  முன்பு சட்ட எழுத்தராக   பணியாற்றிய அனுபவமும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 
*  சட்டம் படித்து வந்த புதுமுகர்கள் நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படுவது, கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. ஆனால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
*  வழக்கறிஞர் அனுபவமின்றி நேரடியாக நீதிபதியாகும் நபர்கள், நம்பிக்கைக்குரிய வழக்குகளை கையாளும்போது திறமையற்ற நிலையில் காணப்படுவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த மாற்றம் நீதித்துறையின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
 
 
Edited by Mahendran