வெள்ளி, 31 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 அக்டோபர் 2025 (09:10 IST)

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!
பிஹாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று  சாப்ராவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணிக்கு எதிராகப்பேசினார்.
 
வரலாறு காணாத தோல்வியை பிஹாரில் எதிர்க்கட்சிகள் சந்திக்கும் என்று கூறிய மோடி, பிஹார் மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
 
பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் முதல்வர், உ.பி., பிஹார் மக்களை மாநிலத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என கூறியபோது, பிரியங்கா காந்தி கைதட்டி சந்தோஷப்பட்டதை கண்டித்தார். மேலும், கர்நாடகா, தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பிஹார் மக்களை இழிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
 
தமிழ்நாட்டில் உழைக்கும் பிஹார் மக்கள், திமுக-வால் துன்புறுத்தப்படுவதாகவும், ஆனால் ஆர்ஜேடி அமைதியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பிஹாரை அவமதித்த காங்கிரஸ் தலைவர்களை ஆர்ஜேடி பிரச்சாரத்துக்கு அழைப்பதாக அவர் விமர்சித்தார்.
 
ஒடிசா தேர்தலுக்கு பிறகு, மீண்டும் பிஹார் தேர்தலிலும் பிரதமர் தமிழகத்தை குறிப்பிட்டுப் பேசியது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
Edited by Siva