வெள்ளி, 24 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 அக்டோபர் 2025 (15:16 IST)

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!
வேலூரில் பள்ளிகள் இன்று மாலை 3 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், 3 மணிக்கே மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் என்றும் வேலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
 
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. இது இன்று பிற்பகலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை கரையைக் கடக்கும்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறுமா என்பது குறித்த தகவல் இன்று வெளியாகும்.
 
இந்த ஆழ்ந்த தாழ்வுப்பகுதி, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதால், கனமழை எச்சரிக்கையாகப் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட சுமார் 17 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் வேலூரில் பள்ளிகள் இன்று மாலை 3 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran