1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 10 மே 2025 (11:08 IST)

பஞ்சாபில் விழுந்த பாகிஸ்தான் ஷெல் வெடிக்குண்டு! 5 பேர் பலி! - பஞ்சாபில் ரெட் அலெர்ட்!

punjab attack

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பஞ்சாபை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளை அழிக்க இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்திய - பாக் எல்லை பகுதிகளனா பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

 

இந்நிலையில் நேற்று இரவும் பஞ்சாப், காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. பஞ்சாபின் குடியிருப்பு பகுதிகள் உள்ள பகுதி மீது பாகிஸ்தான் நடத்திய ஷெல் வெடிகுண்டு வீச்சில் அரசு அதிகாரி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதை தொடர்ந்து பஞ்சாபின் அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K