வெள்ளி, 21 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 நவம்பர் 2025 (10:48 IST)

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும்  இத்தனை லடசம் ஓட்டுக்களா?
சமீபத்தில் நடந்து முடிந்த பிகார் மாநில சட்டமன்ற தேர்தலில் 6.65 லட்சம் வாக்குகள் நோட்டா  பிரிவின் கீழ் பதிவாகியுள்ளன. அதாவது, இந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் போட்டியிட்ட எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை, மாறாக நிராகரிக்கும் உரிமையை பயன்படுத்தியுள்ளனர்.
 
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, மொத்த வாக்கு பதிவில் நோட்டாவின் பங்கு 1.81% ஆகும். 243 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.
 
கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் 7.06 லட்சம் வாக்காளர்கள் (1.68%) நோட்டாவுக்கு வாக்களித்தனர்.
 
2015 சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 9.4 லட்சம் பேர் (2.48%) நோட்டாவைத் தேர்ந்தெடுத்தனர்.
 
இந்த புள்ளிவிவரங்கள், பிகார் வாக்காளர்களிடையே குறிப்பிட்ட சதவீதத்தினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேட்பாளர்களை ஏற்கவில்லை என்பதையும், தங்கள் நிராகரிக்கும் உரிமையை வலுவாக பதிவு செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவதையும் காட்டுகிறது.
 
 
Edited by Mahendran