1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 மே 2025 (10:37 IST)

ஹிந்திக்கு NO!? மகாராஷ்டிராவில் இருமொழிக் கொள்கைதான்.. பாஜக அரசு அறிவிப்பு!

இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் பாஜக ஆளும் மகாராஷ்டிராவிலேயே இருமொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த ஆர்வம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறது. மேலும் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் குரல்கள் வலுத்த நிலையில் சமீபமாக மகாராஷ்டிராவிலும் மொழிப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

 

அங்கு மராட்டிய கட்சிகள் பலவும் மக்கள் மராட்டிய மொழியில் பேசுவதை ஆதரித்தும், இந்திக்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் அங்கும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு இந்தியை மூன்றாவது மொழியாக கொண்டுவர உள்ளதாக வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் இருமொழிக் கொள்கையே தொடரும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே அறிவித்துள்ளார்.

 

மும்மொழிக் கொள்கையை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய பாஜக அரசு பிரயத்தனம் செய்து வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலத்திலேயே அதை அமல்படுத்த முடியாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

Edit by Prasanth.K