திங்கள், 6 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (10:30 IST)

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டணத்தில் திடீர் மாற்றம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டணத்தில் திடீர் மாற்றம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
பொதுமக்களின் அத்தியாவசிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை, வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கள் உட்பட பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழலில், 7 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரி தகவல்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
 
இதற்கு முன், குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் தரவை புதுப்பிக்க ரூ.125 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்தக் கட்டண விலக்கு அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த முடிவால் சுமார் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
குழந்தைகளின் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குவதே இந்தக் கட்டண விலக்கின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva