வியாழன், 27 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 22 நவம்பர் 2025 (16:33 IST)

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நிதிஷ் குமார் சமீபத்தில் 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு இன்று  இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
 
இந்த இலாகா ஒதுக்கீட்டில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது: கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சர் நிதிஷ் குமார் தம்வசம் வைத்திருந்த உள்துறை இலாகா, முதன்முறையாக கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உள்துறையை, பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கவனிப்பார்.
 
பாஜகவின் மற்றொரு துணை முதல்வர் விஜய் சின்ஹாவுக்கு வருவாய், நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல் துறைகள் ஒதுக்கப்பட்டன. சாம்ராட் சவுத்ரி முந்தைய ஆட்சியில் வகித்த நிதி மற்றும் வணிக வரி இலாகா, ஜேடியு-வின் பிரேந்திர பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளும் பாஜக அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகள், புதிய ஆட்சியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை உணர்த்துகிறது.
 
Edited by Mahendran