1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 மே 2025 (16:12 IST)

சத்ரபதி சிவாஜிக்கு புதிய சிலை.. திறந்து வைத்தார் மகாராஷ்டிரா முதல்வர்..!

சத்ரபதி சிவாஜி சிலை வைக்கப்பட்ட சில மாதங்களில் சேதம் அடைந்த நிலையில் தற்போது புதிய சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த 2023 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த சிலை சேதமடைந்தது. இதனை அடுத்து அதே இடத்தில் புதிய சிலையை வைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்தது.
 
தற்போது முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் புதிய சிலையை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த சிலைக்கு 10 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது. 91 அடி உயரம் கொண்ட இந்த சிலையில், சத்ரபதி சிவாஜியின் கையில் இருக்கும் வாள் மட்டும் 23 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
20 கோடி ரூபாய் செலவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் சிற்பி ராம்சுதார் இதனை வடிவமைத்துள்ளதாகவும் முதல்வர் பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை மற்றும் அயோத்தியில் ராமர் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 
 
Edited by Siva