1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 மே 2025 (13:47 IST)

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் புதிய ப்ராண்ட்! ட்ரேட்மார்க் விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

Operation Sindoor Reliance Trademark

சமீபத்தில் இந்திய அரசு நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் பெயரை ட்ரேட்மார்க் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, 31 பேர் கொல்லப்பட்டனர். சிந்தூர் என்றால் குங்குமம் என்று பொருள். பஹல்காமில் இந்திய பெண்களின் குங்குமத்தை பறித்த பயங்கரவாதிகளை அழிப்பது என்ற அர்த்தத்தில் இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டதாகவும், இந்த பெயரை பிரதமர் மோடி பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ராணுவம் வெளியிட்ட ஆபரேஷன் சிந்தூர் லட்சினையை ட்ரேட்மார்க்காக பதிவு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த பெயரில் ரிலையன்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் புதிய தயாரிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்திய அரசின் Patents design and Trademarks அமைப்புக்கு ரிலையன்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ள ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Trademark
 

Edit by Prasanth.K