வியாழன், 4 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 டிசம்பர் 2025 (11:38 IST)

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!
மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஹனுமந்த் சோனாவாலே என்ற நபர் தனது மனைவி ராஜ்ஸ்ரீக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு குடிபோதையில், 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சிறுமி உறங்கி கொண்டிருந்தபோது அதிகாலையில் இந்த தாக்குதல் நடந்தது. மகளை காப்பாற்ற வந்த மனைவி ராஜ்ஸ்ரீ-யையும் அவர் வயிற்றுப் பகுதியில் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தாயும் மகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுமிக்கு கழுத்தில் ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன.
 
வேலையில்லாமல், மதுவுக்கு அடிமையான சோனாவாலே, அடிக்கடி மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு சண்டையிட்டுள்ளார். மேலும், மனைவி விவாகரத்து கோரியதால் ஏற்பட்ட மன உளைச்சலும் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து, சோனாவாலே மீது கொலை முயற்சி மற்றும் குடும்ப வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
Edited by Mahendran