திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 29 நவம்பர் 2023 (07:35 IST)

மீட்புக்குழுவினர்களுக்கும், நிபுணர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி..!

Pm Modi
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் அயராது உழைத்த அனைத்து மீட்புக்குழுவினர்களுக்கும், நிபுணர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரகாசியில் நமது தொழிலாளர்களை மீட்கும் பணி வெற்றிடைந்துள்ளது அனைவரையும் உணர்ச்சிவசமாக்கியுள்ளது என்று கூறிய பிரதமர், சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களின் தைரியமும், பொறுமையும், எல்லோருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது என்றும்,  மீட்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார்,

நீண்ட காத்திருப்புக்கு பிறகு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளது மிகவும் திருப்திகரமான விஷயம் என்றும், இந்த சவாலான நேரத்தில்  தொழிலாளர்கள் குடும்பங்களின் தைரியமும், அவர்கள் காட்டிய பொறுமையும் பாராட்டுக்குரியது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்,

மேலும் இந்த மீட்பு பணியில் அயராது உழைத்த அனைத்து மீட்புக்குழுவினர்களுக்கும், நிபுணர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன் என்று  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Edited by Siva