1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 மே 2025 (11:42 IST)

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

இந்தியாவில் அடிக்கடி புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும், சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியவர்கள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், அகமதாபாத்தில் இன்று ஒரு மிகப்பெரிய புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 50 ஜேசிபி மிஷின்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அகமதாபாத்தில் உள்ள சான்டோலோ என்ற பகுதியில் கட்டி இருக்கும் நிலையில், அந்த கட்டிடங்கள் அனைத்தையும் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த நடவடிக்கைக்கு பாதுகாப்பாக 3000 போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், சுமார் 2.55 லட்சம் சதுர மீட்டர் அளவில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
பெரும்பாலான சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியவர்கள் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva