ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!
ஹைதராபாத்தில் மிகவும் கவலைக்குரிய சம்பவமாக, ஒரு 26 வயதான ஆண் ஒரு பெண்ணின் விரலை கடித்து துண்டித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர், தன் மனைவியுடன் அப்பார்ட்மென்டில் வாடகைக்கு இருந்தார். இந்த ஜோடி ஏப்ரல் மாதம் அந்த வீட்டை விட்டு வெளியேறினாலும், அவர் அக்கம் பக்கம் வீட்டாருக்கு கொடுக்க வேண்டிய சிட் ஃபண்ட் பணம் பற்றிய பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
வீட்டின் உரிமையாளர்ற்றும் அவரது மகள், இந்த நபரிடம் சிட் ஃபண்ட் போட்டிருந்த நிலையில் ரூ.30,000 திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்த தகராறின் போது அந்த நபர் வீட்டு உரிமையாளர் பெண்ணின் விரலை கடித்தார். அதனால் விரலின் ஒரு பகுதி துண்டித்து தரைக்கு விழுந்தது. பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய போது, மருத்தவர்கள் அந்த துண்டிக்கப்பட்ட விரல் பகுதியை மீண்டும் இணைக்க முடியாது என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, பெண்ணின் மகள் போலீசில் புகார் செய்தார். அந்த நபர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Edited by Mahendran