பிற மதத்தவர் எஸ்.சி. சான்றிதழ் பெற்றிருந்தால் ரத்து செய்யப்படும்: மகாராஷ்டிரா முதல்வர்..!
மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்துக்கள், புத்த மதத்தவர் மற்றும் சீக்கியர்களை தவிர பிற மதத்தினர் SC சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பிற மதத்தவர் SC சான்றிதழ் பெற்று அரசு வேலைகள் மற்றும் ஆதாயங்கள் பெற்று இருந்தால் அவை செல்லாததாக மாற்றப்படும் என்றும், பண பலன்கள் இருந்தால் அவை வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
SC சான்றிதழ் என்பது இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் கட்டாய மத மாற்றங்களை தடுக்க வலுவான சட்ட விதிகள் கொண்டுவரப்படும் என்றும், வரும் குளிர்கால கூட்டத் தொடரில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran