1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 ஜூலை 2025 (12:17 IST)

தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடக்குமா?

தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெரு நாய்களால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நோய் பாதித்த தெருநாய்களை மட்டும் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து கேரள மாநில கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சு ராணி கூறியபோது, "சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்றும், சட்டத்தின் அடிப்படையில் தான் கருணைக்கொலை செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார். 
 
கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு நாய்கள் கடித்து சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சம் பேர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 21 குழந்தைகள் தெரு நாய் கடித்ததால் மரணம் அடைந்துள்ளனர் என்றும், நோய் தொற்றுகளை பரப்பும் நோய் பாதித்த தெரு நாய்களை மட்டும் கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்திலும் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதே போன்ற ஒரு அனுமதியை தமிழக அரசு வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva