1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 3 மே 2025 (11:07 IST)

மோடி, அமித்ஷா எனக்கு தற்கொலை வெடிகுண்டு கொடுத்தால் பாகிஸ்தானை அழிக்கிறேன்: அமைச்சர் பேட்டி

ஜம்மு காஷ்மீரின் பஹல்‌காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானை நோக்கி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தயாராக உள்ளேன் என கர்நாடக அமைச்சர் பி.ஏஸ். சமீர் அக்மத் கானின் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பஹல்‌காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான நிலைமை பதற்றமாக உள்ள நிலையில், சமீர் அக்மத் கான் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 
பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவர், "பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவின் எதிரியாகவே இருந்தது. மோடி மற்றும் அமித் ஷா அனுமதி அளித்தால், நான் பாகிஸ்தான் சென்று, என் உடலில் தற்கொலை குண்டு கட்டிக்கொண்டு தாக்குதல் நடத்த தயார். போர் செய்வதற்காகவே போகிறேன்,"
எனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், நாம் இந்தியர்கள், உண்மையான ஹிந்துஸ்தானிகள். பாகிஸ்தான் எப்போதும் நம்மை எதிர்த்துதான் நடந்து வந்திருக்கிறது. நம் நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரையும் கொடுக்க தயார்,” என்று கூறியுள்ளார்.
 
அவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்திலும், சமூக ஊடகங்களிலும் தீவிரக் கவனத்தை பெற்றுள்ளது.
 
 
Edited by Mahendran