அவசர அவசரமாக ஸ்ரீநகர் சென்ற ராணுவ தலைமை தளபதி.. அடுத்த என்ன நடக்கப் போகிறது?
ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள பெஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா அவசரமாக ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றுள்ளதாகவும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ராணுவ அதிகாரிகளுடன் இன்று அவர் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட இருப்பதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் இடையே சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்ரீநகர் மற்றும் உதம்பூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ராணுவ தளபதி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
ஒருவேளை பாகிஸ்தான் தாக்குதல் நடைபெறும் என்பதற்கான சாத்தியம் காணப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் இருக்கும் இடத்தை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Edited by Siva