வெள்ளி, 25 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (09:34 IST)

எல்லையில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு.. போர் தொடங்கிவிட்டதா?

border security
பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்திக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெஹல்காம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதால், 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் உள்ளிட்ட அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இந்திய வீரர்கள் அதற்கும் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவ தரப்பில் சில வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
நேற்று நடந்த இந்த தாக்குதல் காரணமாக, இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி விட்டதோ என்ற அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva