1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 மே 2025 (14:50 IST)

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

தீவிரவாதத்தை அழிக்க இந்தியா முழுமையாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதும், பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் நாடுகளையும் இலக்காக வைத்துள்ளது. இதில் துருக்கி, அசர்பைஜான் மற்றும் சீனாவின் நெருக்கமான கூட்டாளியான பங்களாதேஷ் உட்பட பல நாடுகள் உள்ளன.
 
சமீபத்தில் சீனாவிற்கு சென்ற பங்களாதேஷ் சமூக சேவையாளர் முகம்மது யூனுஸ், இந்தியாவை எதிர்த்து கருத்து தெரிவித்தார். இதற்காக அவரும் அவரது நாடும் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளனர். இந்தியாவின் ஒரு தீர்மானம் மூலம் பங்களாதேஷுக்கு  ரூ.6581 கோடி  இழப்பு ஏற்படவிருக்கிறது.
 
மே 17 அன்று, இந்தியா பங்களாதேஷில் இருந்து துணிகள் உள்ளிட்ட சில பொருட்களை நிலம் வழியாக இறக்குமதி செய்யத் தடை விதித்தது. இப்போது நவா சேவா மற்றும் கொல்கத்தா துறைமுகங்களில்தான் இந்த பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி உண்டு என இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம்  அறிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கையால் பங்களாதேஷ் ஏற்றுமதியில் 42% பாதிப்பு ஏற்படும் என உலக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம்  மதிப்பீட்டுள்ளது.
 
Edited by Siva