1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 மே 2025 (18:29 IST)

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

குஜராத்தில் மே 15 ஆம் தேதி வரை அனைத்து நிகழ்வுகளிலும் பட்டாசுகள் மற்றும் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
 குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தனது எக்ஸ் தளப் பதிவில், "இந்த மாதம் 15 ஆம் தேதி வரை எந்தவொரு விழாக்களிலும் அல்லது நிகழ்வுகளிலும் பட்டாசுகளை வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ அனுமதிக்கப்படாது. தயவுசெய்து ஒத்துழைத்து அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதலை நிகழ்த்த முயற்சித்ததாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
குஜராத்தின் கட்ச் மாவட்டத் தலைநகரான புஜ் நகரிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதனிடையே, கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையின் அருகிலுள்ள கவாடா கிராமத்தில், சுமார் 20 கி.மீ. தொலைவிலிருந்து ஒரு ட்ரோனின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன. இந்த பாகங்கள் பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நோக்கத்துடன் ஏவப்பட்டதாகத் தெரிகிறது.
 
Edited by Siva