1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 ஏப்ரல் 2025 (17:49 IST)

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

Mallikarjun Kharge
கட்சி பணிக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என இன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கட்சியின் தலைவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சோனியா காந்தி உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் கார்கே பேசியபோது, கட்சி அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்ட தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுடைய வழிகாட்டுதலின் படி தான் கட்சி நிர்வாகிகள் பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
 
மேலும், அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நானும் ராகுல் காந்தியும் பேசியுள்ளோம் என்றும், அவர்களுடைய கருத்துக்களை நாங்கள் பரிசீலனை செய்ய உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
 
எதிர்காலத்தில் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையில் மாவட்ட தலைவர்கள் ஈடுபாட்டுடன் பணி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
 
மேலும், கட்சி பணிக்கு உதவாதவர்கள், கட்சி பணியை விருப்பமாகச் செய்யாதவர்கள் தயவு செய்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் கட்சிக்கு தேவையில்லை," என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran