1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 3 ஏப்ரல் 2025 (16:53 IST)

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

Rahul Gandhi
வக்பு வாரிய மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கான விவாதம் சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது.  இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளாமல் மக்களவையை விட்டு வெளியேறியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. இருப்பினும், இந்த மசோதாவுக்கு 288 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால், அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், மசோதா குறித்து நேற்று காலை முதல் விவாதம் நடந்தது. காலை மக்களவைக்கு வருகை தந்த ராகுல் காந்தி, பின்னர் விவாதத்தில் கலந்து கொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே மக்களவையை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து, மசோதா மீதான வாக்கெடுப்பு நேரத்தில் மட்டும் அவர் மீண்டும் வந்தார்.
 
இதனால், விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்திக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஒரு   எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க கூட தகுதியற்றவர் ராகுல் காந்தி என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
 
Edited by Siva