வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (12:11 IST)

நடுவானில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பயணிகள் அதிர்ச்சி..!!

Flight
மும்பையில் இருந்து  திருவனந்தபுரம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மும்பை விமான நிலையத்திலிருந்து, ஏஐ 657 என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் அதிகாலை 5.45 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சற்று நேரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 135 பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் அந்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. 

 
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.  பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.