வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (17:28 IST)

ஒரே நேரத்தில் 50 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். டெல்லியில் பரபரப்பு..!

bomb threat
டெல்லியில் ஒரே நேரத்தில் 50 மருத்துவமனைகளில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் வந்திருப்பதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி சாணக்யபுரி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அடுத்தடுத்து பல மருத்துவமனையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில நிமிடங்களில் மொத்தம் 50 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு இமெயில் மூலம்  வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உங்கள் கட்டிடத்திற்குள் பல வெடிபொருட்களை நாங்கள் வைத்துள்ளோம், அவை கருப்பு பைகளில் உள்ளன, சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும், நீங்கள் ரத்த வெள்ளத்தில் மிதக்க போகிறீர்கள், இந்த உலகத்தில் நீங்கள் வாழ தகுதியற்றவர்கள், கட்டிடத்தில் உள்ள அனைவரும் உயிரை இழக்க போகின்றனர், இன்று தான் உங்களின் கடைசி நாள் என்று அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அதன் பின்னணியில் கோர்ட் என்ற குழு உள்ளதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் சந்தேகப்படும் வகையில் எந்த வித பொருட்களும் கிடைக்கவில்லை என்றும் இது வெறும் மிரட்டல் தான் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran