திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (17:12 IST)

அயோத்தியில் அமிதாப் பச்சன் சாமி தரிசனம்.! சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்..!

amithab
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் நடிகர் அமிதாப் பச்சன் சாமி தரிசனம் செய்தார்.
 
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
 
இந்த கும்பாபிஷேக நிகழ்வில், பிரதமர் நரேந்தி மோடி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல், திரை மற்றும் தொழில் பிரபலங்கள் பங்கேற்றனர்.

கும்பாபிஷேக நிகழ்வில் அமிதாப் பச்சன் அவரது மகனுடன் பங்கேற்றிருந்தார். 23ஆம் தேதி முதல் கோயிலில் பொதுமக்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தி ராமர் கோயில் சென்று தரிசனம் செய்துள்ளார்.


வெள்ளை உடை அணிந்து, அதன் மீது காவி நிற கோட் அணிந்த அமிதாப் பச்சன், கோயில் தரிசனத்தை முடித்து விட்டு, பாதுகாவலர்களுக்கு மத்தியில் கோயிலில் இருந்து வெளியேறும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது