ஜெய் ஸ்ரீராமும் சொல்லலாம், அல்லாஹூ அக்பரும் சொல்லலாம்- முகமது ஷமி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சளர் முகமது ஷமி, ஜெய் ஸ்ரீராமும் சொல்லலாம், அல்லாஹூ அக்பரும் சொல்லலாம் என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட்டி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சளர் முகமது ஷமி, ஜெய் ஸ்ரீராமும் சொல்லலாம், அல்லாஹூ அக்பரும் சொல்லலாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு மதத்திலும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை பிடிக்காத 10 பேர் இருப்பார்கள். ராமர் கோவில் கட்டப்படுகிறது எனும் போது ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது. ஆயிரம் முறைகூட ஜெய் ஸ்ரீராம் என்று கூறலாம். அதேபோல் அல்லாஹூ அக்பர் என நான் சொல்ல விரும்பினால், அதை ஆயிரம் முறைகூட சொல்வேன் …இதில் என்ன வேறுபாடு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.