திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (18:45 IST)

அயோத்தி ராமர் கோயிலுக்கான மணிகள் நாமக்கல்லில் தயாரிப்பு: 48 மணிகள் அனுப்பி வைப்பு

அயோத்தி ராமர் கோவிலுக்காக நாமக்கல் பகுதியில் மணிகள் தயாரிக்கப்பட்ட நிலையில் அந்த மணிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அயோத்தி ராமர் கோவில்  கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கோவிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணிகள் மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் நடந்த ஒரு மாதமாக செய்யப்பட்டது. 
 
இந்த மணிகள் செய்யும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  இன்னும் ஓரிரு நாள்களில் அனைத்து மணிகளும் ராமர் கோவிலுக்கு சென்று அடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.  
 
70 கிலோ எடையில் 5 மணிகள், 60 கிலோ எடையில் ஆறு மணிகள், 25 கிலோ எடையில் ஒரு மணி என மொத்தம் 12 மணிகள் 36 பிடி மணிகள் அனுப்பப்பட்டுள்ளதாக மணிகள் தயாரித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva