கனமழை எதிரொலி.. சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை: வனத்துறை அறிவிப்பு..!
கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பின் அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளம் ஏற்படும் நேரங்களில் தடை விதிக்கப்படும்.
இந்த நிலையில் டிசம்பர் 13 முதல் 16 வரை கார்த்திகை மாத பிரதோஷம், பௌர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva