தொடர்புடைய செய்திகள்
- அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!
- செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?
- இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!
- ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!
செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!
ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட்டில் 193 நாடுகள் பங்கேற்கும் நிலையில், இந்திய அணி வீரர்கள் வெற்றி பெற்று அசத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஆடவர் பிரிவில், அமெரிக்காவை வீழ்த்தி, தங்கம் வெல்வதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கியுள்ளது.
இன்று நடந்த பத்தாவது சுற்றில், இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவை சேர்ந்த ஃபேபியனோ கருவானாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
முன்னதாக, ஆடவர் அணி எட்டு சுற்றுகளில் வெற்றி பெற்ற நிலையில், ஒன்பதாவது சுற்றில் சமநிலை பெற்றது. பத்தாவது சுற்றின் முடிவில், இந்தியா 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பதால், தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இன்று நடைபெறும் ஓபன் பிரிவில், இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva
