வெள்ளி, 24 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendrn
Last Modified: புதன், 22 அக்டோபர் 2025 (17:58 IST)

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

Gold price rise
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,680 குறைந்து, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
 
இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 குறைந்து, ஒரு சவரன் ரூ. 93,600-க்கும், ஒரு கிராம் ரூ. 11,700-க்கும் விற்பனையானது.
 
ஆனால் இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ. 92,320-க்கும், ஒரு கிராம் ரூ. 11,540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக, இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 3,680 குறைந்துள்ளது.
 
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் ரூ. 175-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
தீபாவளி பண்டிகை நெருங்கி வந்தபோது உயர்ந்திருந்த தங்கம், தற்போது குறைந்துள்ளதால் நகை வாங்குவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
 
Edited by Mahendrn