தங்கம் விலை 2000 ரூபாய் உயர்வு.. வெள்ளி விலை 2000 ரூபாய் குறைவு... சென்னை நிலவரம்..!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.97,440 என்ற விலையிலும், ஒரு கிராம் தங்கம் ரூ.12,180 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலை ஏற்றம், நடப்பு ஆண்டிற்குள் தங்கத்தின் விலை சவரன் ரூ.1 லட்சத்தை தொடும் என்ற சந்தை நிபுணர்களின் கணிப்பிற்கு வலு சேர்க்கிறது. கடந்த வாரத்தில் சவரனுக்கு ரூ.5,600 உயர்ந்து ரூ.97,600 என்ற உச்சத்தை எட்டிய நிலையில், சனிக்கிழமை மற்றும் தீபாவளி தினத்தன்று சற்று விலை குறைந்திருந்தது. தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.188-க்கும், ஒரு கிலோ ரூ.1,88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உள்ளூர் விலைகளும் கடுமையாக ஏற்ற இறக்கம் கண்டு வருகின்றன.
Edited by Siva