1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold price decreases today

மெல்ல மெல்ல குறைந்து ரூ.36,856-க்கு வந்த தங்கத்தின் விலை!

சென்னை
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.   
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.   
 
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,607-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
மெரினாவில் கூடிய கூட்டம்: விரட்டியடிக்கப்பட்ட துயரம்!