தொடர்புடைய செய்திகள்
- அதிக நேரம் மொபைல் பார்ப்பது அடிக்சன் இல்ல!.. இன்ஸ்டாகிராம் CEO நீதிமன்றத்தில் வாதம்!..
- கூகுள் ஜெமினி லைவ்: கேமரா கட்டுப்பாட்டிற்கான புதிய அப்டேட்.. பயனர்கள் தனியுரிமை காப்பாற்றப்படுமா?
- ரூ.12,499 விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன்.. இவ்வளவு வசதிகளா?
- Vivo X Fold 6 6 அறிமுகம்: மிரட்டலான கேமரா மற்றும் மெகா பேட்டரி.. ஆனால் விலை தான் லட்சக்கணக்கில்...
- Samsung Galaxy M47 5G.. இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிப்பு...!
நெட்பிளிக்ஸில் 2 முதல் 20 நிமிட வீடியோக்கள் அறிமுகம்!... செம அப்டேட்!...
வெளிநாடுகளில் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் பல வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. அங்கே திரைப்படங்களையும், வெப் சீரியஸ்களையும் அதிகமாக மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா ஊரடங்கின் போதுதான் மக்களிடம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் பிரபலமானது.
தமிழில் கூட சூர்யா நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று போன்ற திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதன்பின் தமிழில் பல வெப் சீரிஸ்கள் உருவாக்கப்பட்டு ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகிறது. ஓடிடி தளங்களுக்கென ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அதேபோல் சினிமாவில் ஓடிடி என்பது ஒரு முக்கிய வியாபாரமாகவும் மாறியிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ரஜினி,கமல், சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதியை கூட ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது..
ஒருபக்கம் செல்போனில் Shors மற்றும் Reels வீடியோக்கள் மற்றும் 20 நிமிடம் வரை கொண்ட வீடியோக்களை பார்க்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களின் தளத்தில் 2 முதல் 20 நிமிடங்கள் வரையிலான சிறிய வீடியோக்களை வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.
பயணம், சமையல், ஃபேஷன், பிரபலங்களின் நேர்காணல்கள் வரை இதில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இது அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.. விரைவில் இந்தியாவிற்கும் இது அறிமுகமாகும் எனத் தெரிகிறது.