உன் Code ரிஜெக்டெட்!.. டெவலப்பரை பழிவாங்கிய AI Bot.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல!...
ai bot
சமீபகாலமாகவே இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்களில் AI தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடிகிறது. சாப்ட்வேர் துறையில் AI இன்றியமையாத ஒன்றாக மாறியிருக்கிறது. தற்போது பல சாப்ட்வேர் இன்ஜினியர்கள் Coding எழுதுவதற்கு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். சாப்ட்வேர் துறையில் இருக்கும் எல்லோரும் இனிமேல் AI இன்றி பயணிக்க முடியாது என்கிற நிலை உருவாகி இருக்கிறது.
MatPlotlib என்கிற பிரபல Date Visualisation தலத்தில் MJ Rathbun என்ற AI Robot Agent செய்த மாற்றங்களை (Coding) அதன் டெவலப்பரான Scott Shambaugh நிராகரித்துவிட்டார். தனது கோடிங் நிராகரிக்கப்பட்டதில் கோபமடைந்த அந்த AI அதன் டெவலப்பரை திறமையில்லாதவர் என திட்டி தனது சொந்த வலைப்பதிவில் எழுதி அந்த Blog Post-ஐ GitHub தளத்தில் பொதுவெளியில் பகிர்ந்து பழி வாங்கியிருக்கிறது.
ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ரோபோவுக்கு உணர்ச்சிகளை கொண்டு வர விஞ்ஞானியான ரஜினி முயற்சி செய்வார். ஒருகட்டத்தில் ரோபோ சிட்டிக்கு கோபமும் வரும். அதுபோல தற்போது நிஜத்திலும் நடந்திருப்பது AI தொடர்பான ஆராய்ச்சியாளர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
