1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: திங்கள், 14 ஏப்ரல் 2025 (17:40 IST)

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்த சூரி, இப்போது கதாநாயகன் அவதாரத்தில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார். கதாநாயகனாக அவர் நடித்த படங்கள் பாராட்டும் பெற்றதுடன், சூப்பர்ஹிட் பட்டியலில் சேர, அவரது அடுத்த படம் ‘மாமன்’ ரிலீஸ் பற்றிய அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
 
‘மாமன்’ படத்தின் ரிலீஸ் தேதி மே 16 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான புதிய போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இவை ரசிகர்களிடையே செம வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 
சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘விடுதலை பாகம் 1’ கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அபார வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, ‘கருடன்’ மற்றும் ‘விடுதலை பாகம் 2’ போன்ற படங்களும் ஹிட் ஆகின.
 
தற்போது சூரியின் ‘மாமன்’ படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் தொடர்பான புரமோஷன் வேலைகள் விரைவில் தீவிரமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சூரியுடன்  ராஜ்கிரண், ஐஸ்வர்யா, ஸ்வாசிகா, ஜெயபிரகாஷ், பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர் மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
ஹேசம் அப்துல் வகாப் இசையமைப்பில் பிரசாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சூரிக்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva