வியாழன், 9 அக்டோபர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2025 (18:00 IST)

திருப்பதியில் கோலாகலமாக நிறைவடையும் பிரம்மோற்சவ விழா: இறுதி நாளில் குவிந்த பக்தர்கள்!

திருப்பதியில் கோலாகலமாக நிறைவடையும் பிரம்மோற்சவ விழா: இறுதி நாளில் குவிந்த பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, இன்று கோலாகலமாக நிறைவடைகிறது. பத்து நாட்களாக நடைபெற்ற இந்த உற்சவத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் தினமும் காலை மற்றும் இரவு என இருவேளைகளிலும் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 
பிரம்மோற்சவத்தின் மிக முக்கியமான நிகழ்வான தங்க கருட வாகன சேவை கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்றது. விழாவின் 8-ம் நாளான நேற்று ஏழுமலையான் ரத உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். நேற்று இரவு தங்கக் குதிரை வாகன சேவை நடந்தது.
 
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று   சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன், ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். 
 
 
Edited by Mahendran