1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (19:41 IST)

மதுரை சித்திரை திருவிழா 2025. திருவிழா நிகழ்ச்சிகளின் முழுவிவரம்..!

Meenakshi Amman
மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலில், வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை மாத திருவிழாவுக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த விழா, மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளல் என முக்கியமான நிகழ்வுகளுடன் நகரம் முழுவதும் பண்டிகை சூழ்நிலையில் இருவாரங்கள் நடைபெறும். 2025 சித்திரை திருவிழா நிகழ்ச்சி ஒவ்வொன்றாக இதோ:
 
ஏப்ரல் 27 (ஞாயிறு): காலை 6–7 மணி: தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில்,
 
சித்திரை கொட்டகை முகூர்த்த விழா
 
ஆயிரம்பொன் சப்பரம் தலை அலங்காரம்
 
காலை 11 மணி: வண்டியூர் தேனூர் மண்டபத்தில்
 
கொட்டகை முகூர்த்த விழா
 
மே 8: அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்
 
மே 9: சுந்தர்ராஜ பெருமாள், கோவில் மண்டபத்தில் எழுந்தருளல்
 
மே 10 (சனி): மாலை 6 மணி: கள்ளழகர் வேடம் தரித்து மதுரை நோக்கி புறப்பட்டு வருதல்
 
மே 11: மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும்
 
மே 12 (திங்கள்): காலை 5.45 மணி: தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
 
பின்னர்: ராமராயர் மண்டபத்தில்
 
தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி
 
மே 12 இரவு: அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் இரவு எழுந்தருளல்
 
மே 13 (செவ்வாய்): வீர ராகவ பெருமாள் கோவிலில் இருந்து
 
சேஷ வாகனத்தில் புறப்பாடு
 
தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளல்
 
மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல்
 
தசாவதார கோலத்தில் காட்சியளிப்பு (முழு இரவும்)
 
மே 14 (புதன்): அதிகாலை: மோகன அவதாரத்தில் காட்சியளித்தல்
 
பின்: அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடு
 
மே 15: பூப்பல்லக்கில் புறப்பட்டு, கோவிலுக்கு பின் திரும்புகை
 
மே 16: காலை 10 மணி: கள்ளழகர் கோவிலுக்கு திரும்பி சேர்கிறார்
 
மே 17: உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது
 
இந்த தகவல்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. வெங்கடாசலம் மற்றும் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் அறிவித்துள்ளனர்.
    
Edited by Mahendran