1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 மே 2025 (09:53 IST)

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா! கோலாகலமாக நடந்த கொடியேற்றம்! - முழு விழா அட்டவணை!

Thiruthani Murugan Temple

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் சித்திரை திருவிழா தொடங்கும் நிலையில் இன்று பக்தர்கள் சூழ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

 

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சென்னைக்கு அருகே அமைந்துள்ள திருத்தணி முருகன் கோவில், தமிழக மக்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த மக்களும் வந்து வழிபடும் கோவிலாக உள்ளது. ஆண்டுதோறும் திருத்தணியில் நடைபெறும் சித்திரை திருவிழா பிரபலமானது.

 

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று விமர்சையாக பக்தர்கள் சூழ நடைபெற்றது. இதை தொடர்ர்ந்து தினம்தோறும் பல்வேறு பல்லக்கு வீதி உலா, திருத்தேர் பவனி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

 

திருத்தணி முருகன் கோயில் சிறப்பு நிகழ்ச்சிகள்:

 
  • மே 2 - காலை வெள்ளி சூரிய பிரபை வாகன உலா, இரவு பூத வாகன உலா
  • மே 3 - காலை சிம்ம வாகன பவனி, இரவு ஆட்டுக்கிடாய் வாகன உலா
  • மே 4 - காலை பல்லக்கு வீதி உலா, இரவு வெள்ளி நாக வாகன உலா
  • மே 5 - காலை அன்ன வாகன உலா, இரவு வெள்ளி மயில் வாகன உலா
  • மே 6 - மாலை புலி வாகன உலா, இரவு யானை வாகன உலா
  • மே 7 - திருத்தேரோட்டம்
  • மே 8 - யாளி வாகன சேவை, தெய்வானை திருக்கல்யாணம்
 

Edit by Prasanth.K