ஞாயிறு, 28 செப்டம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (18:00 IST)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா: பந்தக்கால் தேதி அறிவிப்பு..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா: பந்தக்கால் தேதி அறிவிப்பு..!
உலகப் பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான ஆயத்த பணிகள் நாளை தொடங்குகின்றன. இதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி, நாளை காலை 6:00 மணி முதல் 7:30 மணிக்குள் நடைபெற உள்ளது.
 
அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கார்த்திகை தீபத்திருவிழா. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள்:
 
நவம்பர் 24: கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
 
டிசம்பர் 3: அதிகாலையில் கோயிலுக்குள் பரணி தீபமும், மாலையில் கோயிலின் பின்புறமுள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
 
விழாவின் தொடக்கப் பணிகளான பந்தக்கால் முகூர்த்தத்திற்காக, நாளை சம்பந்த விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட உள்ளன. பின்னர், புனிதநீர் தெளிக்கப்பட்ட பந்தக்காலுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சகர்கள் அதனை ராஜகோபுரம் வரை சுமந்து வருவார்கள். அங்கு, பந்தக்காலுக்குத் தீபாராதனை காட்டப்பட்டு, பந்தக்கால் நடப்படும். 
 
Edited by Mahendran