1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 ஜூலை 2025 (18:59 IST)

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை: நன்மைகளும், தவறான பழக்கங்களும்!

Hair Mask
தலைக்கு எண்ணெய் தேய்ப்பது கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பிரச்சனைகள் ஏற்படலாம். 
 
தினசரி அதிகப்படியான எண்ணெய் தடவுவது மயிர்க்கால்களை அடைத்து, முடி வளர்ச்சியை தடுக்கக்கூடும். மேலும், அதிக எண்ணெய் பசை இருக்கும் தலையில் தூசியும், அழுக்கும் எளிதாக படிந்து, அரிப்பு மற்றும் சொரிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 
 
கூந்தல் பராமரிப்பில் என்றும் முதலிடத்தில் இருப்பது மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான். சிறிதளவு எண்ணெயை எடுத்து, தலை முழுவதும் படும்படி நன்றாக தேய்த்து, மென்மையாக மசாஜ் செய்வது அவசியம். 
 
ஆனால் அதே நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதிலும் ஒரு அளவு உள்ளது. அளவுக்கு அதிகமாக தினமும் எண்ணெய் தேய்த்தால் முடியின் ஆரோக்கியம் குறைய தொடங்கிவிடும் என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.
 
Edited by Mahendran