1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. BSNL has announced to stop free service on sunday

இலவச சேவைகளை நிறுத்திய பிஎஸ்என்எல்: காரணம் என்ன??

பிஎஸ்என்எல்
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஞாயிற்றுக் கிழமைகளில் வழங்கி வந்த இலவச அழைப்பு சலுகையை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
 
கடந்த 2016 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் பிஎஸ்என்எல் லேண்ட்லைனில் அனைத்து அழைப்புகளும் இலவசம் என்ற சலுகை திட்டத்தை செயல்படுத்தி வந்தது.
 
இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இச்சலுகையை நிறுத்துவதாக அறித்துள்ளது. மேலும், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் சலுகைக்கான கால அளவை இரவு 10.30 முதல் காலை 6 மணியாக குறைத்துள்ளது. இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 
 
ஜியோ வருகையால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருவதால் பிஎஸ்என்எல் இதே காரணத்தால் இது போன்ற சலுகைகளை நிறுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!