1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. virat kohli got first place in batters list

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

virat kholi
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொடரில் 302 ரன்கள் அடித்ததோடு இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் எடுத்து சிறப்பாக விளையாடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

மேலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 93 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருக்கிறார். ஒருநாள் மேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் 785 புள்ளிகள் புள்ளிகளைப் பெற்று இந்திய வீரர் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார்.

கிட்டத்தட்ட 5  வருடங்களுக்கு பின்னர் முதலிடத்தை பிடித்திருக்கிறார் விராட் கோலி. ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ரோஹித் இரண்டு இடங்கள் சறுக்கி மூன்றாவது இடத்திற்கு சென்று விட்டார். மேலும், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 2ம் இடத்தை பிடித்திருக்கிறார். இப்ராஹிம் சத்ரவன் 4வது இடத்திலும், சுப்மன் கில் 5வது இடத்திலும் இருக்கிறார்கள்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!