1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2025 (14:18 IST)

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக கவனம் ஈர்த்த வீரர்களில் ஒருவர் லக்னோ அணியை திக்வேஷ் ரதி. ஒவ்வொரு முறையும் ஒரு வீரரை விக்கெட் எடுக்கும் போதும் அவர் கையெழுத்துப் போடும் வித்தியாசமானக் கொண்டாட்ட முறையால் ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்துக் கொண்டே இருந்தது.

ஆனாலும் அவர் தொடர்ந்து தனது கொண்டாட்ட முறையை நிறுத்தவில்லை. இந்நிலையில் அவர் உள்ளூர் டி 20 போட்டி ஒன்றில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.  இந்த போட்டியில் மொத்தமாக அவர் 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அவரின் இந்த வீடியோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம் சமூகவலைதளத்தில் வெளியிட அது வைரல் ஆகிவருகிறது.