வியாழன், 12 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2024 (09:10 IST)

ஷமி அடுத்த விமானத்திலேயே ஆஸ்திரேலியா செல்லவேண்டும்… கங்குலி கருத்து!

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதை உறுதிப் படுத்தும் விதமாக அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பவுலிங் பயிற்சியை பெங்களூருவில் மேற்கொண்டார்.

இதையடுத்து ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆனால் அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி “ஷமி உடனே அடுத்த விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவேண்டும். அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட தேவையில்லை. அவர் பெர்த் டெஸ்ட்டில் விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவர் ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.