1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 மே 2025 (11:08 IST)

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

Abhishek sharma vs Digvesh Rathi

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதிக் கொண்டபோது இரு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் இடையே வாக்குவாதம் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சன் ரைசர்ஸ் சேஸ் செய்துக் கொண்டிருந்தது. அப்போது சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 6 சிக்சஸர்கள், 4 பவுண்டரிகள் விளாசி 59 ரன்களை குவித்திருந்தார். லக்னோ அணி பெரும் முயற்சியில் அபிஷேக் சர்மா விக்கெட்டை தூக்கியது.

 

லக்னோ பந்துவீச்சாளர் திக்வேஷ் ரது வீசிய பந்தில் ஷர்துல் தாகுரிடம் அவுட் கொடுத்து வெளியேறினார் அபிஷேக் சர்மா. அப்போது திக்வேஷ் ரதி, அபிஷேக் சர்மாவை பார்த்து ‘வெளியே போ’ என ஆவேசமாக சொன்னதால் பதிலுக்கு அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக அபிஷேக் சர்மாவுக்கு 25 சதவீதம் அபராதமும், திக்வேஷ் ரதிக்கு 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேறும் அடுத்த ஒரு போட்டியில் திக்வேஷ் ரது விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K